கோவிலுக்குள் புகுந்து, நாய்க்குட்டியை கவ்வி தூக்கிச் சென்ற சிறுத்தை.. திக் திக் காட்சி
ஆந்திராவில் கோவிலுக்குள் புகுந்த சிறுத்தை, அங்கு படுத்திருந்த நாய்க்குட்டியை கவ்வி தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவில் கோவிலுக்குள் புகுந்த சிறுத்தை, அங்கு படுத்திருந்த நாய்க்குட்டியை கவ்வி தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கர்னூல் மாவட்டத்திலுள்ள ரெகுவ அகோபிலம் என்ற கோவிலில், இரண்டு குட்டிகளுடன் நாய் ஒன்று வசித்து வந்தது. இந்த நிலையில், இரவு நேரத்தில் பதுங்கி, பதுங்கி வந்த சிறுத்தை, அங்கு படுத்திருந்த நாய்க்குட்டியில் ஒரு குட்டியை வாயில் கவ்வியது.
தனது குட்டியை காப்பாற்றுவதற்காக நாய் தீரத்துடன் ஓடோடி வந்தும், சிறுத்தை அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டதால் அதனால் காப்பாற்றமுடியாமல் போனது.
சிசிடிவி காட்சிகளை கொண்டு, வனத்துறையினர் சிறுத்தையை தேடி வருகின்றனர்.
Comments