ஹவுதி கிளர்ச்சி படை கடத்திய கப்பலில் சிக்கியுள்ள 7 இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்

0 1857

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய கப்பலில் இருக்கும் 7 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக  நிறுவனத்தின் Rwabee கப்பலில் பயணித்த 7 இந்தியர்கள் உள்பட 11 பேரை ஹவுதி கிளிர்ச்சியாளர்கள் கடத்தினர். ஏமன் நாட்டின் Hodeidah துறைமுகம் அருகே சென்ற கப்பலை கடந்த 2-ஆம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தினர்.

விரைவில் 7 இந்தியர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments