கண்ணிவெடிகளை கண்டறியும் 'ஹீரோ ரேட்' எலி மரணம்.. 5 ஆண்டு பணியில் 100-க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டறிந்த எலி..

0 2653
கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டறிவதில் தேர்ச்சி பெற்ற மகாவா என்ற எலி அதன் ஓய்வு காலத்தில் மரணம் அடைந்தது.

கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டறிவதில் தேர்ச்சி பெற்ற மகாவா என்ற எலி அதன் ஓய்வு காலத்தில் மரணம் அடைந்தது.

அதன் 5 ஆண்டு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டறிந்து நூற்றுக்கணக்கானவர்களின் உயிரை காத்துள்ளது. ஹீரோ ரேட் என்று அழைக்கப்படும் அந்த எலி , APOPO என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் மையத்தில் அதன் இறுதி மூச்சை விட்டது.

பல ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போர் காரணமாக கம்போடியாவில் ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு மேலான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கை கால்களை இழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தன்சானியாவில் பிறந்த மகாவா கண்ணிவெடிகளை கண்டறிய 2016-ல் கம்போடியாவுக்கு அழைத்து வரப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments