ஐபிசி, சிஆர்பிசி, இந்திய ஆதாரச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை - அமைச்சர் அமித்ஷா

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள விலைமதிப்பிலாத தங்களின் பரிந்துரைகள் வழங்குமாறு எம்.பி.க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மக்களை மையமாகக் கொண்ட சட்ட அமைப்பை உருவாக்க மத்திய அரசு விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் அனைவருக்கும், குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாகவுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதையொட்டி குற்றவியல் சட்டங்களின் கட்டமைப்பில் விரிவான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், சட்டம் இயற்றும் நடைமுறைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியப் பங்குள்ளதாக தெரிவித்துள்ளார்.
Comments