பிறந்து ஒரு மாதம் ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாலையோரம் வீசி சென்ற மர்மநபர்கள்..

0 1574
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தின் அருகே, பிறந்து ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை சாலையோரம் வீசி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தின் அருகே, பிறந்து ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை சாலையோரம் வீசி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ரெங்கம்மாள் நகர் பகுதியில் சாலையோரத்தில் இருந்த துணிப் பையில், குழந்தை அழு குரல் சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்த போது, அதில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்துள்ளது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் பெற்றோர்கள் குறித்தும், சாலையோரம் வீசி சென்ற மர்மநபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments