ஐதராபாத் விமான நிலையத்தில் வயிற்றுக்குள் வைத்து தங்கம் கடத்திய பெண்.. மொத்தம் 3 பெண்களிடம் ரூ.72.8 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

0 1603

துபாயில் இருந்து ஐதராபாத் விமான நிலையத்திற்கு வயிற்றுக்குள் வைத்து தங்கம் கடத்தி வந்த பெண்ணிடம் விசாரித்து வருவதாக  சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெவ்வேறு விமானங்களில் வந்த 3 பெண் பயணிகளிடம் சோதனையிட்ட போது 72 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 481 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் ஒரு பெண் பயணி குடலில் தங்கத்தை வைத்து கடத்தி வந்தாக தெரிவித்தனர். 3 பேரிடமும் விசாரித்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments