தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் இன்று திறப்பு

0 3163
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். காணொலி மூலம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதார அமைச்சர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். காணொலி மூலம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதார அமைச்சர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாட்டில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஆயிரத்து 450 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கப்பெறும்.

11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா ஆகியோர் நேரடியாக பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இனி மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5,250 ஆக அதிகரிக்கும். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், மொத்தம் 9,150 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை அருகே 24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments