ஸ்கூட்டியில் ஆட்டோவை முந்த முயன்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் உரசி விபத்து

0 2750

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே முன்னால் சென்ற ஆட்டோவை முந்த முயன்ற நபரின் இருசக்கர வாகனம், எதிரே வந்த அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் உரசியதில் கீழே விழுந்து அவர் பலத்த காயமடைந்தார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் சஜி என்பவர் காலை தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார்.

கருங்கல் சந்திப்புப் பகுதி அருகே முன்னால் சென்ற ஆட்டோ ஒன்றை சஜி முந்த முயன்ற நிலையில், அந்த நேரம் எதிரே வந்த அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் அவரது இருசக்கர வாகனம் உரசியுள்ளது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சஜி பலத்த காயமடைந்தார். தலைக்கவசம் அணியாமல் சென்றதால் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments