என்ன சாலை இது? ஒப்பந்ததாரரை விளாசிய அமைச்சர்

0 3771

கன்னியாகுமரியில் சாலைப் பணிகள் தரமற்ற முறையில் நடப்பதை பொதுமக்கள் சுட்டிக் காட்டிய நிலையில், சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சந்தித்து கடும் எச்சரிக்கை விடுத்தார்.

குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்த நாகர்கோவில் முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிகள் நீண்ட போராட்டத்துக்குப் பின் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால் கைகளால் பெயர்த்து எடுக்கும் அளவுக்கு தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சாலைப் பணிகள் நடக்கும் பகுதிக்கு வந்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சாலையைத் தோண்டிப் பார்த்து, தரமாக இல்லை என்றால் லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் கொடுக்கட்டுமா? என்று ஒப்பந்ததாரரை எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments