வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு..!

0 2493
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

தனிநபர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பும் மற்றும் இணையதளத்தில் ஏற்பட்ட குளறுபடியை கருத்தில் கொண்டு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு பட்டய கணக்காளர் சங்கங்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று தற்போது 2020 - 2021 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு வருகிற மார்ச் 15 ஆம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 15 என்று இருந்த நிலையில் வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments