வாகனத்தை வேகமாக ஓட்டி வந்ததாகக் கூறி உணவக உரிமையாளரை தாக்கிய காவலர்..!

0 5327

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வாகனத்தை வேகமாக ஓட்டியதாகக் கூறி ஓட்டல் உரிமையாளரை, காவலர் ஒருவர் தாக்கியதாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

சந்திரன் என்பவரது உணவகத்துக்கு அருகே ஆயில்பட்டி காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் பாபு வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 1ம் தேதி சந்திரன் கடைக்காக பொருட்களை வாங்கிக் கொண்டு தனது மனைவியுடன் வந்துக் கொண்டிருந்த போது எதிரே வந்த காவலர் பாபு, ஆட்டோவை வழிமறித்து ஏன் வேகமாக வருகிறாய் என்று கேட்டு சந்திரனுடன் தகராறில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் சந்திரன் அங்கிருந்து கடைக்கு வந்த நிலையில், பின் தொடர்ந்து வந்த காவலர் உணவகத்திற்குள் புகுந்து சந்திரனை தாக்கியதாகவும், சந்திரன் ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments