டாஸ்மாக்கில் மது வாங்க கட்டுப்பாடு..!

0 4880

டாஸ்மாக் கடைகளில் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மதுபானம் விநியோகிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுபானக் கடைகளில் கொரோனா தொற்று நெறிமுறைளை பின்பற்றுவது குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மதுபானக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது என்றும் 2 வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மதுபானக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது என்றும் மதுக்கடை பணியாளர்கள் தவறாது முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments