சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. பெரியம்மாவுக்கு பெரிய ஆப்பு..!

0 4579

விழுப்புரத்தில் 11ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், உடந்தையாக இருந்ததாக மாணவியின் பெரியம்மா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தாய், தந்தையை இழந்து ஆதரவற்று தனது வீட்டில் வசித்து வந்த தங்கை மகளுக்கு பெரியம்மா செய்த பெருங்கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படித்த சிறுமி ஒருவர் தாய், தந்தையை இழந்து பெரியம்மா வீட்டில் வசித்து வந்தார். பத்தாம் வகுப்பு வரை சென்னையில் விடுதியில் தங்கி பயின்ற சிறுமி, பின்னர் விழுப்புரத்திலுள்ள பெரியம்மா வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது, சிறுமியின் வயிறு பெரிதாக இருந்ததால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமுற்றிருப்பதை கண்டறிந்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.

அப்போது, எதுவுமே தெரியாதது போல் நடித்த சிறுமியின் பெரியம்மா, சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் நாடகமாடியிருக்கிறாள். ஆனால், விசாரணையில் சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு முழுக்க முழுக்க அவரது பெரியம்மா உடந்தையாக இருந்தது தெரியவந்ததை அடுத்து போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த ஊரைச் சேர்ந்த 77 வயதான மண்ணாங்கட்டி என்ற வெங்கடேசனுக்கும், சிறுமியின் பெரியம்மாவுக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் பெரியம்மாவை சந்திக்க வரும் வெங்கடேசன், அவ்வப்போது சிறுமியிடமும் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு கொள்ளாமல் இருந்த அந்த பெரியம்மாகாரி, சிறுமியின் கற்பை அடமானமாக வைத்து அடிக்கடி வெங்கடேசனிடம் காசு, பணம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தாக சொல்லப்படுகிறது.

இதை தெரிந்த அந்த பெரியம்மாவின் மகன் அதாவது சிறுமியின் கொடூர மனம் படைத்த அண்ணனும், பயிரை மேய்ந்த வேலி என்பது போல் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தகவல் போலீசாருக்கு மற்றொரு பேரதிர்ச்சியாக காத்திருந்தது.

அத்தோடில்லாமல், தாயின் உடந்தையுடன் தனது நண்பர்கள் சிலரையும் அழைத்து வந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சீரழித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாமல் திணறிய அந்த சிறுமி, கருவுற்றதும் தெரியாமல் உடல்நலன் குன்றி புழுங்கி போயிருந்த நிலையில் தான், மருத்துவமனைக்குச் செல்லும் போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிலையில், சிறுமியை சின்னாப்பின்னமாக்கிய கொடூரர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியின் பெரியம்மா, அவரது மகன் என இதுவரை 9 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு யாரேனுக்கும் சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments