சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானங்கள் என புகார் - ஈஷாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை

கோவை ஈஷா யோகா மையத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமானங்கள் மேற்கொண்டதாக கூறி அனுப்பிய நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006 முதல் 2012ஆம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நோட்டீசுக்கு எதிராக ஈஷா அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணையில், 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை தொடர்ந்து ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.
அறிவிப்பாணையில் முன் தேதியிட்டு அமல்படுத்துவதாக குறிப்பிடப்படாத நிலையில், அதற்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானங்கள்
Comments