திடீரென தீப்பிடித்து எரிந்த ஒக்கினாவா மின்சார ஸ்கூட்டர்..!

0 6292

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் மின்சார ஸ்கூட்டர் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

திட்டக்குடி பிரதான சாலையில் கடை ஒன்றை நடத்தி வரும் பழனிவேல் என்பவர், தன்னுடைய ஒக்கினாவா (okinawa) மின்சார ஸ்கூட்டரில் வீட்டிலிருந்து கடைக்குச் சென்றுள்ளார். ஸ்கூட்டரை வாசலில் நிறுத்திவிட்டு, அவர் கடைக்குள் சென்ற சில நொடிகளில் ஸ்கூட்டரின் இருக்கைக்குக் கீழிருந்து புகை வந்துள்ளது.

இருக்கையை உயர்த்திப் பார்த்தபோது, பேட்டரி வைக்கப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து தீப்பிழம்பு கிளம்பத் தொடங்கி இருக்கிறது. மளமளவென தீ அதிகமான நிலையில், மண்ணை வாரிக் கொட்டியும் தண்ணீரை ஊற்றியும் நீண்ட நேரம் போராடி பழனிவேல் தீயை அணைத்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட ஸ்கூட்டர் என்று கூறப்படும் நிலையில், பேட்டரியை ஓவர் சார்ஜிங் செய்வது, முறையாகப் பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்களால் தீப்பிடித்து இருக்கலாம் என மெக்கானிக்குகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments