நமது குறிக்கோள் பெரிதாக இருந்தால்தான் சாதனைகளும் பெரிதாக இருக்கும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2007

நமது குறிக்கோள் பெரிதாக இருந்தால்தான் சாதனைகளும் பெரிதாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை செயலாளர்களுடனான ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர், இதுவரை மொத்தம் வெளியிடப்பட்ட 1641 அறிவிப்புகளில், 80 சதவீதம் என்ற அளவில் 1313 அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள் வெளியிடப்பட்டதற்காக பாராட்டு தெரிவித்தார்.

மீதமுள்ள அறிவிப்புகளுக்கும் ஆணைகளை வெளியிட்டு, செயல்பாட்டில் வந்துள்ளனவா என்று கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

செயல்திட்டத்தை உருவாக்கி, வளர்ந்த நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் செயல்பாடுகளுக்கு நம்முடைய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments