11ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்-8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவன் போக்சோவில் கைது

0 3735

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 11-ம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தாய், தந்தையை இழந்த அந்த மாணவி, பெரியம்மாவின் ஆதரவில் வசித்து வந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சென்ற போது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. விசாரணையில் பெரியம்மாவின் உடந்தையுடன் அவரது மகனே நண்பர்கள், தெரிந்தவர்களை அழைத்து வந்து மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆதரவற்று அடைக்கலம் தேடி தனது வீட்டில் தங்கியிருந்த தங்கையை கொடூர மனம் படைத்த அண்ணனே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், மாணவியின் பெரியம்மா, பெரியம்மாவின் மகன் மற்றும் 77 வயது முதியவன் உட்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments