"பொங்கல் தொகுப்பில் தரமான கரும்பு, வெல்லம் வழங்க வேண்டும்"-எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

0 4429

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான கரும்பு மற்றும் வெல்லம் வழங்க வேண்டும், என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மேலும், அதை பையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்கள் எடை குறைவாகவும், வட மாநிலத்தில் இருந்து வாங்கி தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments