அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்.. 16 வயது மாணவன் உயிரிழப்பு.. 3 பேர் கைது!- தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள்

0 9492

கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மோதல் கொலையில் முடிந்த நிலையில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலாந்துறை அருகேயுள்ள அந்த அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் இரு பிரிவினருக்கு இடையே யார் பெரியவன், யார் வலியவன் என்ற ரீதியில் ஈகோ பிரச்சனை இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், கடந்த 8ஆம் தேதி மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது ஒரு தரப்பு, அதே பள்ளியில் படித்த 17 வயதான முன்னாள் மாணவனை உதவிக்கு அழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.. அன்றைய தினம் இரவு இந்த முன்னாள் மாணவன் உட்பட 2 பேர் சேர்ந்து எதிர் தரப்பைச் சேர்ந்த 3 மாணவர்களை கடுமையாகத் தாக்கி கத்தியாலும் குத்தியுள்ளதாக, கூறப்படுகின்றது.

இந்த தாக்குதலில் 3 பேரும் படுகாயமடைந்த நிலையில், கத்தியால் குத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், காயமடைந்த மாணவர்களில் ஒருவன் உயிரிழந்ததால், கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments