தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்.. காணொளியில் நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

0 1895

தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா ஆகியோர் நேரடியாக பங்கேற்க உள்ளனர்.,

இந்தாண்டு கூடுதலாக 1,500 எம்பிபிஎஸ் இடங்கள் தமிழகத்துக்கு கிடைக்கவுள்ளன. இதன் மூலம், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில், மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5,250 ஆக உயர்கிறது.

இதனால் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், மொத்தம் 9,150 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments