கன்னியாகுமரியில் வீட்டின் சுவர் ஏறி குதித்து ரப்பர் ஷீட்டுகளை திருடிச் சென்ற நபரின் சிசிடிவி காட்சிகள்

0 1843

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே வீட்டின் சுவர் ஏறி குதித்து ரப்பர் ஷீட்டுகளை திருடிச் சென்ற மர்ம நபரை, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.

குழிக்கோடு பகுதியைச் சேர்ந்த லாசர் தோமஸ் என்பவர், ரப்பர் பாலை பதப்படுத்தி ரப்பர் ஷூட்டுகளாக மாற்றி, அதனை விற்பனை செய்து வருகிறார்.

இவர் தனது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 32 ரப்பர் ஷீட்டுகள் காணாமல் போனதையடுத்து, வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் ஒரு நபர் வீட்டின் சுவர் ஏறி குதித்து சுற்றிலும் பார்வையிட்டு வீட்டின் பின்பக்கம் இருக்கும் ரப்பர் ஷீட்டுகளை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அந்த சிசிடிவி காட்சிகளுடன் அவர் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments