மகர சங்கராந்தியன்று கங்கை நதியில் பக்தர்கள் புனித நீராட தடை

0 1602
மகர சங்கராந்தியன்று கங்கை நதியில் பக்தர்கள் புனித நீராட தடை

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மகர சங்கராந்தியன்று ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் பக்தர்கள் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

வரும் 14ஆம் தேதி மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் புனித நீராடலுக்கு தடை விதிக்கப்படும் எனவும் மாவட்டத்தில் வசிப்பவர்கள் கூட அப்பகுதியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் விதியை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments