பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்.. போதை ஆசாமிகள் 4 பேர் கைது

0 1787

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பெட்ரோல் போட தாமதமானதால் மதுபோதையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கண்டாச்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க்கிற்கு நேற்றிரவு 4 பேர் பாட்டிலில் பெட்ரோல் வாங்க வந்துள்ளனர். அப்போது, வரிசையில் இருந்தவர்களுக்கு ஒருவர் பின் ஒருவராக ஊழியர்கள் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த நிலையில், தங்களுக்கு பெட்ரோல் வழங்க தாமதமானதால் ஆத்திரமடைந்த 4 பேரும் ரகளையில் ஈடுபட்டதோடு, ஊழியர் அரவிந்தனை தாக்கினர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர் வந்ததையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில்,  அரவிந்தன் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments