நெருங்கும் பொங்கல் பண்டிகை.. நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

0 1989

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.

நல்லம்பள்ளி சந்தைக்கு சுமார் 2 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்கவும் விற்கவும் ஏராளமானோர் குவிந்தனர்.

சந்தையில் ஒரு ஆடு 7 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில் விற்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments