தொடர் முழு ஊரடங்கு கிடையாது.. அமைச்சர் விளக்கம்..!

0 5910
தொடர் முழு ஊரடங்கு கிடையாது.. அமைச்சர் விளக்கம்..!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை அடையாறு மண்டல அலுவலகத்தில் அவசர ஆலோசனை மையத்தை திறந்து வைத்த பின் பேசிய அவர், மொத்த கொரோனா பாதிப்பில் 85சதவீதம் ஒமைக்ரானுக்கான அறிகுறிகளாக இருப்பதாக கூறினார்.

தற்போது வரும் பாதிப்பு எல்லாம் எஸ்.ஜீன் டிராப் பாதிப்பு என்பதால் தனியாக ஒமைக்ரான் பரிசோதனை செய்வதில்லை எனவும், இருப்பினும், புது புது வகையான வைரசுகள் பரவி வருவதால் கிளஸ்டர் ஏரியாக்களில் இருப்போரின் மாதிரிகள் மட்டும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளதாகவும், தற்போதைய நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கே போதுமானது எனவும், பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர் முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments