பிரான்ஸிடம் இருந்து இந்தியா பெறும் கடைசி 4 ரஃபேல் விமானங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் டெலிவரி எனத் தகவல்

0 1788

பிரான்ஸிடம் இருந்து இந்தியா பெறும் 36 ரஃபேல் போர் விமானங்களில் கடைசி 4 விமானங்கள் வரும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதத்திற்குள் டெலிவெரி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 32 விமானங்களை இந்தியாவுக்கு பிரான்ஸ் அனுப்பியுள்ள நிலையில், இந்தியா விமானப் படை கொடுத்த கூடுதல் தொழில்நுட்ப அம்சங்கள் பொருத்தப்பட்ட மீதமுள்ள 3 விமானங்கள் பிப்ரவரி 1 அல்லது 2-ஆம் தேதிகளிலும், கடைசி ஒரு விமானம் ஏப்ரல் மாதமும் டெலிவெரி செய்யப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விமானங்களில் வான் விட்டு வான் சென்று தாக்கும் ஏவுகணை, ஃப்ரிகுவென்ஸி ஜாம்மர், அதிநவீன ரேடார், தாக்க வரும் ஏவுகணை குறித்து எச்சரிக்கை எழுப்பும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஃபேல் போர் விமானங்களுக்கு இணையாக சீனாவிடம் இருந்து J-10 ரகத்தைச் சேர்ந்த 25 போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments