அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்?

0 1790

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் தேதி மாற்றப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அலங்காநல்லூர் போட்டி நடைபெறும் ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

அதன்காரணமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி குறித்து இறுதி முடிவெடுக்க, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆலோசனைக்கு பின் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு ஜனவரி 17ஆம் தேதி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments