114 கோடி ரூபாய் மதிப்பில் மதுரையில் அமையவுள்ள பிரமாண்ட கலைஞர் நினைவு நூலகம்

0 1724

மதுரையில் சுமார் 114 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமாக அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் 2லட்சத்து 179 சதுர அடி பரப்பளவில், 7 தளங்களுடன் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படவுள்ளது.

கட்டுமானத்திற்கு 99 கோடி ரூபாயும், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் நூல்கள் வாங்க 15 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. வாகன நிறுத்துமிடம், கூட்ட அரங்குகள், குழந்தைகளுக்கான படிப்பு அறைகள், ஒளி, ஒலி காட்சி கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்படுகின்றன.

தமிழ், ஆங்கிலம், ஆன்மிகம், சமூகம், அறிவியியல், மொழிபெயர்ப்பு, குடிமைப்பணிகள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தேவையான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள் உள்பட இரண்டரை லட்சம் நூல்கள் வைக்கப்படவுள்ளன. கட்டுமானப் பணிகளை 12 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments