மீண்டும் முழு ஊரடங்கா.? - முதலமைச்சர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை.!

0 7481

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை மறு நாள் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒமைக்ரான் வைரஸ் காரணமாக, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 10ஆயிரம், 20ஆயிரம் என அதிகரித்து, தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 60ஆயிரத்தை கடந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உயர்மட்ட ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மாவட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பை உறுதிப்படுத்தவும், 15 வயது முதல் 18வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து நாளை மறு நாள் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் காணொளி முலம் அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனையில், மாநில அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்தும், கொரோனா தடுப்பு பணிகளின் நிலை குறித்தும் பிரதமர் மோடி கலந்தாலோசிப்பார் எனக் கூறப்படுகிறது. அத்தோடு, தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்துவது குறித்தும் முக்கிய அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்குவார் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments