11 புதிய மருத்துவக் கல்லூரிகள் நாளை திறப்பு ; பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்பு

0 1949
11 புதிய மருத்துவக் கல்லூரிகள் நாளை திறப்பு ; பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்பு

புதிய மருத்துவக்கல்லூரிகள் திறப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர். விருதுநகர், ராமநாதபுரம் உள்பட தமிழகத்தில் 11 இடங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் ஆகி உள்ளன.

இதில் விருதுநகர் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிக்காக மாநில அரசு 250 கோடி ரூபாயும், மத்திய அரசு 130 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 380 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த விழாவிற்கு பிரதமர் மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆதலால் நாளை காணொலி காட்சி மூலம் விழாவை மோடி மற்றும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments