பள்ளி- கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை

0 5673

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை, வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அதுவரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக, உயர்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், வரும் 31-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுதாகவும், அதுவரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என, பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதேநேரத்தில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் எனவும், அவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் தொடரும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் 19-ம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments