சேலத்தில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய திமுக தொழிற்சங்க நிர்வாகி கைது.!

0 7266

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ஓட்டுனருக்கு வழித்தடம் மாற்றி கொடுப்பதாக 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய திமுக தொழிற்சங்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

தாரமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த பரமசிவம் என்பவர் வெளியூர் வழித்தட  பேருந்திலிருந்து உள்ளூர் வழித்தட பேருந்திற்கு பணி மாற்றம் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

இதை அறிந்த  திமுக தொழிற்சங்க நிர்வாகி குணசேகரன் என்பவர் பரமசிவத்தை அணுகி பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால்  விரும்பும் வழித்தடத்தில் மாற்றி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வதாக  கூறியுள்ளார்.

ஆனால் இதை விரும்பாத  பரமசிவம், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின் படி பரமசிவம்  தாரமங்கலம் பேருந்து நிலையத்தில், முதல் தவணையாக 5ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்த போது அங்கே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் குணசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments