இந்தியாவில் ரூ.35-ல் சந்தைக்கு வர இருக்கும் பெரியவர்களுக்கான கோவிட் மாத்திரை

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான தொற்று பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் வாய் வழியாக உட்கொள்ளும் மாத்திரை 35 ரூபாய் விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Molnupiravir கோவிட் சிகிச்சை மாத்திரையை BDR ஃபார்மாசூட்டிகல்ஸ் மற்றும் மேன்கைண்ட் ஃபார்மா நிறுவனங்கள் கூட்டாக அறிமுகம் செய்யவுள்ளன.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாத்திரைக்கு 35 ரூபாய் வீதம், முழு கோவிட் சிகிச்சைக்கு ஆயிரத்து 400 ரூபாய் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. DCGI எனப்படும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு, கோவிட் பாதித்த பெரியவர்களின் ஆக்ஸிஜன் செறிவு அளவு 93 சதவீதமாக இருந்து, சம்பந்த பட்ட நபருக்கு தொற்று கடுமையான பாதிப்பு ஏற்படும் என கருதும் பட்சத்தில் Molnupiravir மாத்திரையை பயன்படுத்த அனுமதி அளித்து உள்ளதாகா தெரிவிக்கபட்டு உள்ள்து
Comments