தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு.. புதிய கட்டுப்பாடுகள்

0 23272

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்த முதலமைச்சர், வழிபாட்டுத் தலங்கள், பேருந்துகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments