புதுச்சேரியில் 2 இருசக்கர வாகனங்களை திருடிய 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

0 1793

புதுச்சேரியில் இரு வெவ்வேறு இடங்களில் 2 இருசக்கர வாகனங்களை திருடிய கொள்ளையர்கள், அவற்றை ஓட்டிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

வில்லியனூரில் வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கே.டி.எம், பைக்கை திருடியதோடு, உருவையாறு பகுதியிலும் டியோ பைக்கை திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், திருடிய பைக்குகளின் பதிவு எண்ணை கழட்டிவிட்டு பதிவெண் இல்லாமல் ஓட்டி வந்த கொள்ளையர்கள் மூவரும் வாகன சோதனையின் போது சிக்கினர்.

முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதிலளித்ததையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது அவர்கள் பைக்குகளை திருடிவிட்டு பவ்வியமாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட கடலூர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த செந்தில் முருகன் உள்ளிட்ட இருவரை சிறையில் அடைத்த போலீசார் சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments