நாயை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று, நாயை விழுங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று, நாயை விழுங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
தேனங்குடிபட்டி மலைப்பகுதியில் நாயின் அலறல் சத்தத்தைக் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்குவதை பார்த்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த மலைப்பாம்பு, நாய் இறந்த பின்பு அதன் உடலை வெளியே கக்கியதையடுத்து, பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர், அதனை கொட்டாம்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
Comments