எந்த எந்த அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்..? தமிழக அரசு விளக்கம்

0 5977
சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலே அவர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலே அவர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த அறிகுறி உடையவர்கள் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அறிகுறி இல்லையென்றாலும் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை மையங்கள் அல்லது வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தாலே 7வது நாள் பரிசோதனை மேற்கொள்ளாமல் டிஸ்சார்ஜ் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments