தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட நல்ல உடல் தகுதி பெற்றுள்ளதாக விராட்கோலி பேட்டி

0 5425
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான நாளைய டெஸ்ட் போட்டியில் விளையாட நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான நாளைய டெஸ்ட் போட்டியில் விளையாட  நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார். கேப் டவுனில் செய்தியாளர்களிடம் பேசிய கோலி இதனை கூறினார்.

கடந்த டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் யாருக்கும் தம்மை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர், தற்போது டெஸ்ட் தரவரிசையில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்து வரும் இந்திய அணி தான் கேப்டனாக பொறுப்பேற்ற சமயத்தில் 7-வது இடத்தில் இருந்தது என்றார். 

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒன்றில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் கேப்டவுனில் நாளை 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments