தண்ணீர் திருட்டு வழக்கில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கக் கூடாது - உயர்நீதிமன்றம்

0 2122
தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கக் கூடாது என்றும் மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரம்பிக்குளம் - ஆழியாறு இணைப்பு திட்ட கால்வாயிலிருந்து நீர் எடுக்க அனுமதித்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

அனுமதி பெற்றாலும் சட்டவிரோதமாக நீர் எடுப்பதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து, நீர் திருட்டு நடைபெறும் இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக நீர் வளத்துறை விளக்கம் அளித்தது.

இந்நிலையில், சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்போர், உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவுகளை அமல்படுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments