ஜார்கண்டிலிருந்து கோவை வந்த ரயிலில் ஆவணங்களின்றி ரூ.30 லட்சம்.. ஹவாலா பணமா என விசாரணை.?

0 1621

கோவை வந்த ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வடமாநில இளைஞர் கொண்டுவந்த 30 லட்ச ரூபாயை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் விரைவு ரயில் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் வந்து சேர்ந்தது.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார், ஒவ்வொரு பெட்டியாக சென்று வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது வடமாநில இளைஞன் ஒருவனின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கிடமாக இருந்ததால் அவனது உடமைகளை சோதனை செய்தனர்.

அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக 30 லட்ச ரூபாய் பணம் இருந்தது. இராஜஸ்தானைச் சேர்ந்த லால் சிங் ராவ் என்ற அந்த இளைஞனை அதே ரயிலில் கோவை அழைத்துச் சென்ற போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments