ஜோகோவிச்சின் விசா ரத்து உத்தரவை நீக்கியது ஆஸ்திரேலிய நீதிமன்றம்

முன்னணி டென்னிஸ் வீரரான நோவோக் ஜோகொவிச்சின் விசா ரத்து செய்யப்பட்ட உத்தரவை நீக்கி ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வரும் 17ஆம் தேதி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தொடங்க உள்ள நிலையில், இதில் பங்கேற்க வீரர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தாத ஜோகோவிச் மெல்போர்னில் உள்ள விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் விசாவும் ரத்து செய்யப்பட்டது.
இதனை அடுத்து, குடியேற்றத் துறையின் தடுப்புக் காவல் மையமாக செயல்படும் ஓட்டலுக்கு அவர் அனுப்பப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக ஜோகோவிச் தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை திருப்பித்தரவும், தடுப்புக்காவல் மையத்தில் இருந்தும் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், குடியேற்றத்துறை அமைச்சர், தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி விசாவை ரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Comments