துறைமுகத்தில் நின்றிருந்த 2 நாட்டுப்படகுகளில் தீப்பிடித்து 1 படகு முற்றிலுமாக சேதம்.. மர்ம நபர்கள் தீ வைத்தார்களா என விசாரணை.?

0 1401

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டுப்படகுகள் திடீரென தீப்பற்றி எரிந்ததில், ஒரு படகு முற்றிலுமாக எரிந்து நாசமானது.

மூக்கையூரைச் சேர்ந்த அடிமை என்பவருக்கு சொந்தமான படகும் பாம்பன் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமான படகும் இன்று அதிகாலை அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த தீ விபத்தில் லட்சக் கணக்கில் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தீப்பற்றியதற்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், மர்ம நபர்கள் யாரேனும் படகுகளுக்கு தீ வைத்தார்களா என்ற கோணத்தில் ராமநாதபுரம் மீன்வளத்துறை இணை இயக்குநர் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments