மும்பை விமான நிலையத்தில் பயணிகள் இருந்த விமானத்தின் அருகில், இழுவை இயந்திரத்தில் தீவிபத்து.!

0 2079

மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் இழுவை இயந்திரம் திடீரெனத் தீப்பிடித்த எரிந்ததையடுத்துத் தீயணைப்பு வீரர்கள் உடனடியாகத் தண்ணீரைப் பீய்ச்சியடித்து 10 நிமிடத்தில் தீயைக் கட்டுப்படுத்தினர்.

மும்பையில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்குப் புறப்பட்ட விமானத்தில் பயணிகள் 85 பேர் இருந்தனர். அதன் அருகில் நின்ற இழுவை இயந்திரம் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது.

இதையறிந்ததும் அருங்கிலிருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு 10 நிமிடங்களில் தீயை முழுவதும் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும், விமான நிலையத்தின் செயல்பாடுகள் வழக்கம்போல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments