ஒடிசா மாநிலத்தில் பேருந்தை தாக்கிய யானை.. பேருந்தை தும்பிக்கையால் சில மீட்டர் தூரத்திற்கு தள்ளி அட்டகாசம்

0 1868

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராசகோவிந்த்பூர் அருகே சாலையில் காட்டுயானை ஒன்று பேருந்தை பின்புறமாக இருந்து தாக்கி சில மீட்டர் தூரம் வரை தும்பிக்கையால் தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

ராசகோவிந்த்பூர் வனப்பகுதியில் அமைந்துள்ள சகுந்தபாடா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவில் காட்டுயானைகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த கூட்டத்தில் இருந்த குட்டியானை ஒன்று கிராமத்தில் இருந்த 5 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்ததையடுத்து நேற்று 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதை வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரங்களுக்குள்ளாகவே அதே வனப்பகுதியில் சாலையில் ஓல்மராவில் இருந்து பாலசோர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தை பின்னால் இருந்து தாக்கிய காட்டு யானை ஒன்று, அதை தும்பிக்கையால் சில மீட்டர் தூரத்திற்கு தள்ளியது.

யானையின் இந்த தாக்குதலால் அச்சமடைந்து பேருந்தில் இருந்த ஓட்டுநர் உட்பட பயணிகள் அனைவரும் இறங்கி ஓட்டம் பிடித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments