அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்திற்கு 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்

0 1210

திருவண்ணாமலையில் அதிகரித்துவரும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அங்குள்ள அனைத்து பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் நான்கு திசையில் உள்ள கோபுர நுழைவு வாயிலிலும் போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் அல்லது குருஞ்செய்தி போன்றவை உள்ளவர்களையே சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கின்றனர்.

இதனால் இன்று காலைமுதல் போதிய தடுப்பூசி ஆவணம் இல்லாத, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத உள்ளூர் மற்றும் கேரளா, ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்த ஆயிறக்கணக்கான பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments