திருச்சி அருகே குடியிருப்பு பகுதியில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச்சென்ற மர்மநபர்..
திருச்சி பெரிய மிளகுபாறையின் குடியிருப்பு பகுதியில் நிறுத்தியிருந்த பைக்கை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருச்சி பெரிய மிளகுபாறையின் குடியிருப்பு பகுதியில் நிறுத்தியிருந்த பைக்கை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வழக்கம்போல் பணி முடித்து, நண்பர் மணிகண்டனுடன் தங்கியிருந்த வீட்டின் அருகில், முத்துகுமார் பைக்கை நிருத்திவிட்டு சென்றுள்ளார்.
காலை பணிக்குசெல்லலாம் என்று வெளியே வந்தவர், பைக் நிருத்துமிடம் காலியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, நீதிமண்ற காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், அருகிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு, முத்துகுமாரின் பைக்கை திருடியதை கண்டறிந்தனர். அந்த மர்ம நபர் யார், என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Comments