பஞ்சாப் பயணத்தின்போது பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு.. விசாரணை குழு அமைக்க முடிவு

0 2603
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக பேரணியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி கடந்த 5-ம் தேதி, பஞ்சாப் சென்றபோது, பெரோஸ்புர் செல்லும் வழியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்குள்ள பாலத்தில் பிரதமரின் காரும் உடன் வந்த பாதுகாப்பு வாகனங்களும், சுமார் 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "லாயர்ஸ் வாய்ஸ்" என்ற அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த வெள்ளியன்று இந்த மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பிரதமரின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றப் பதிவாளர் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தில் பஞ்சாப் உயர்அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து, மத்திய அரசு வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர்.

மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞரான டுஷார் மேத்தா கூறுகையில், விவசாயிகளின் போராட்டம் மற்றும் பிரதமர் செல்லும் பாதை மறிக்கப்பட்டது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், இதுதொடர்பாக பஞ்சாப் டிஜிபி மற்றும் மாநில உளவுத்துறைக்கு மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது சரியான நடவடிக்கையே எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இக்குழுவில் தேசிய புலனாய்வுத்துறையின் ஐ.ஜி, பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தின் பதிவாளர், பஞ்சாப் டிஜிபி மற்றும் மத்திய உளவுத்துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் இடம்பெறுவர் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments