யானை சாணத்தில் கலந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள், முகக் கவசம், நாப்கின்..

0 2039
கோயம்புத்துர் மாவட்டம் மருதமலை அடிவாரத்தில், வனப்பகுதியை ஒட்டி உள்ள குப்பைக்கிடங்கில் இருந்து உணவு தேடி உண்ணும் யானைகளின் சாணத்தில் பிளாஸ்டிக் கவர்கள், முகக் கவசம், நாப்கின் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்துள்ளது.

மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் யானைகள் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்து வந்து பார்த்த வன உயிரின ஆர்வலர் முருகானந்தம் என்பவர், யானை ஒன்று போட்டுச் சென்ற சாணத்தில் பால் பாக்கெட் கவர், சாம்பார் பொடி பாக்கெட் கவர், நாப்கின், முகக்கவசம் உள்ளிட்டவை இருப்பதை கண்டறிந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  மருதமலைக்கு அருகிலுள்ள சோமயம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்ட குப்பைக்கிடங்குக்கு வரும் யானைகள் பிளாஸ்டிக் குப்பைகளையும் சேர்த்து உண்பதாகவும், அதனால் யானைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments