பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியதால் இந்திய பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றம்

0 2077
இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி இயக்கம் தொடங்கியுள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 651 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

 

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி இயக்கம் தொடங்கியுள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 651 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிக நேரத் தொடக்கத்தில் இருந்தே முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை வாங்கினர். பூஸ்டர் தடுப்பூசி இயக்கம் தொடக்கியுள்ளதால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக வணிகம் ஏற்றமடைந்ததாகக் கருதப்படுகிறது.

வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 651 புள்ளிகள் உயர்ந்து அறுபதாயிரத்து 396 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 191 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து மூன்றாக இருந்தது. வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்கு மதிப்பு மூன்றரை விழுக்காடு வரை உயர்ந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments