புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை

0 2280
புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

புதுச்சேரி நகர மற்றும் கிராம பகுதியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் மூடப்பட்டுள்ளன.

எனினும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அம்மாநில கல்வித்துறை அறிவுறுத்தியதன் பேரில், ஆசிரியர்கள் பள்ளிகளில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.

10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments